/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நவோதயா பள்ளி 6ம் வகுப்பு நுழைவுத் தேர்வு புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

ADDED : ஜன 19, 2024 07:49 AM
புதுச்சேரி: நவோதய வித்யாலயா பள்ளி ஆறாம் வகுப்பு நுழைவுத் தேர்வினையொட்டி, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை 20ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 27 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 649 நவோதயா வித்யாலயா பள்ளிகள் உள்ளன. புதுச்சேரியில் நான்கு நவோதயா பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் சேர கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில் விண்ணப்பித்த மேகாலாயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், அருணாசலபிரதேசம், திபாங் பள்ளதாக்கு, இமாச்சலபிரதேசம் உள்பட பல பகுதிகளுக்கு நவம்பர் 4ம் தேதி ஆறாம் வகுப்பிற்கு நுழைவுத் தேர்வு முதற்கட்டமாக நடந்தது.
பிற மாநில மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட ஆறாம் வகுப்பு நுழைவுத் தேர்வு நாளை 20ம் தேதி காலை 11:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கிறது.
அறிவு திறன் -50 மதிப்பெண், எண்கணித அறிவு தேர்வு-25, மொழியறிவு-25 என, மொத்தம் 100 மதிப்பெண்ணிற்கு 2 மணி நேரம் நடக்க உள்ளது. இத்தேர்வினையொட்டி, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் நாளை 20ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி 3ம் தேதி பள்ளிகள் இயங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவினை பள்ளி கல்வித் துறை இணை இயக்குனர் சிவகாமி பிறப்பித்துள்ளார்.