/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நேதாஜி பிறந்தநாள் விழா; சபாநாயகர் மரியாதை
/
நேதாஜி பிறந்தநாள் விழா; சபாநாயகர் மரியாதை
ADDED : ஜன 24, 2024 04:26 AM

புதுச்சேரி : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு சபாநாயகர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி அரசு சார்பில், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி, லாஸ்பேட்டை, உழவர்சந்தை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், பாஸ்கர் எம்.எல்.ஏ., ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மக்கள் முன்னேற்றக் கழகம்
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் ராமதாஸ் தலைமையில், சேர்மன் வெங்கட்டராமன், பொதுச்செயலாளர் ராஜன், உதவி செயலாளர் ஆண்டாள் மாலை அணிவித்தனர்.
தமிழ் ஒளி கல்வி வட்டம்
அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம், கவிஞர் தமிழ் ஒளி கல்வி வட்டம் சார்பில் மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் 'சூசி' கம்யூ., மாநில செயலாளர் லெனின் துரை, கவிஞர் தமிழ் ஒளிகல்வி வட்ட ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன், அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்க மாநில தலைவர் சுதாகர் ரத்தினம், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராசன், செயலாளர் முருகவேல், ஈரம் பவுண்டேஷன் ராஜா, தமிழ் ஒளிகல்வி வட்ட சண்முகம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

