/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தா கல்வியியல் கல்லுாரியில் ஒரு நாள் தேசிய பயிற்சி முகாம்
/
விவேகானந்தா கல்வியியல் கல்லுாரியில் ஒரு நாள் தேசிய பயிற்சி முகாம்
விவேகானந்தா கல்வியியல் கல்லுாரியில் ஒரு நாள் தேசிய பயிற்சி முகாம்
விவேகானந்தா கல்வியியல் கல்லுாரியில் ஒரு நாள் தேசிய பயிற்சி முகாம்
ADDED : ஜூன் 24, 2025 08:04 AM

புதுச்சேரி : புதுச்சேரி விவேகானந்தா கல்வியியல் கல்லுாரியில் ஒரு நாள் தேசிய பயிற்சி முகாம் நடந்தது.
டில்லி ஐ.சி.பி.ஆர். நிறுவனத்தின் நிதியுதவியுடன், விவேகானந்தா கல்வியியல் கல்லுாரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகாவும் இந்திய அறிவுத் தொன்மைகளும் என்ற தலைப்பில் ஒரு தேசிய அளவிலான ஒருநாள் பயிற்சி முகாம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.கல்லுாரி முதல்வர் சிங்காரவேலு தலைமை தாங்கிப் பேசினார்.
விவேகானந்தா கல்வி நிறுவனர் பத்மா, இந்திய அறிவு தொன்மைகளும், யோகாவும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் கல்வி பாதையை வளமாக மாற்றும் பங்களிப்பு குறித்து பேசினார்.
தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பாலாஜி, யோகாவின் தத்துவ அடிப்படைகள் இன்றைய வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
புதுக்கோட்டை அரசு கலைக் கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் கிருஷ்ணசாமி, திருவாரூர் அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் புவனேந்திரன் விளக்கவுரையாற்றினார்.
முகாமில் நுாற்றுாக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.