/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புகையிலை பழக்கம் மீட்பு மையம் திறப்பு
/
புகையிலை பழக்கம் மீட்பு மையம் திறப்பு
ADDED : ஜன 19, 2024 07:52 AM

பாகூர்: பாகூர்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புகையிலை பழக்கம் மீட்பு மையம் திறக்கப்பட்டது. புதுச்சேரி மாநில சுகாதார இயக்கம், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் மற்றும் தேசிய சுகாதார திட்டம் இணைந்து, பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புகையிலை பழக்கம் மீட்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நடந்தது. மாநில நோடல் அதிகாரி கவிப்பிரியா வரவேற்றார்.ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஆனந்தவேலு துவக்கவுரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர் மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேஷ், புகையிலை பழக்கம் மீட்பு மையத்தைதிறந்து வைத்து,விழிப்புணர்வு போஸ்டர்களை வெளியிட்டார். புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துவிளக்கினார்.
திங்கள் முதல் சனிக் கிழமை வரை காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படும்.புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு சிகிச்சை அளிக்க நிகோடின் சேர்ந்த மருந்துகள் போதுமான அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது என, மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்பாடுகளை,பல் மருத்துவர் தேவி செய்திருந்தார். என்.டி.சி.பி., மாநில ஆலோசகர் சூரியகுமார் நன்றிகூறினார்.

