தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை

தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை

தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை


ADDED : நவ 29, 2024 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2024 04:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருடன், தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு தலைமைப் பொறியாளர் தீனதயாளன் தலைமை தாங்கினார். எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்று, வில்லியனுார் கஸ்துாரிபாய் காந்தி திருமண மண்டபம் புதிதாக கட்டுவது. சுல்தான்பேட்டை குளம் சீரமைப்பு.

மூர்த்தி நகர், பாண்டியன் நகர் சாலை மற்றும் வாய்க்கால்கள், ஏ.எப்.டி., கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் உத்திரவாகினிபேட், பெரிய பேட், அம்பேத்கர் நகர், எஸ்.எஸ்., நகர், கரையான்பேட் பகுதிகளில் பணிகளுக்கான டெண்டரை விரைவாக செயல்படுத்துவது.

ஜி.என். பாளையம், ஆத்துாவாய்க்கால் பேட், பாலாஜி நகர், சிவகிரி நகர், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் சிறு பாலங்கள் அமைப்பது குறித்து ஆலோசனை செய்தனர்.கூட்டத்தில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், உமாபதி, சுந்தரமூர்த்தி, மல்லிகா உட்பட பலர் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us