sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இயற்கை விவசாயம் பயிற்சி முகாம்

/

இயற்கை விவசாயம் பயிற்சி முகாம்

இயற்கை விவசாயம் பயிற்சி முகாம்

இயற்கை விவசாயம் பயிற்சி முகாம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, வில்லியனுார் ஆத்மா பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் இயற்கை விவசாயத்தின் நோக்கம் மற்றும் நன்மைகள் குறித்த பயிற்சி முகாம் திருக்காஞ்சியில் நடந்தது.

ஆத்மா திட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். வில்லியனுார் வேளாண் அலுவலர் உமாராணி வரவேற்றார். ஆத்மா துணை திட்ட இயக்குனர் கலைச்செல்வி மற்றும் காரைக்கால் பஜன்கோ உழவியல் துறை பேராசிரியர் மோகன், இயற்கை விவசாயத்தின் நோக்கம் மற்றும் நன்மைகள் குறித்து பேசினர்.

துணை வேளாண் இயக்குனர் அமர்ஜோதி, வேளாண் அலுவலர்கள் தினகரன், சத்தியன் மற்றும் வில்லியனுார், திருக்காஞ்சி, ஒதியம்பட்டு மற்றும் அரியூர் உழவர் உதவியகத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வம், ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் மற்றும் கலப்பணியாளர்கள் செய்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar