தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓய்வூதிய ஆணை எம்.பி., வழங்கல்

 ஓய்வூதிய ஆணை எம்.பி., வழங்கல்

 ஓய்வூதிய ஆணை எம்.பி., வழங்கல்


ADDED : மார் 09, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 04:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதியோர், விதவை, ஆதரவற்றோர்களுக்கான ஓய்வூதியம், உதவித் தொகை ஆணையை செல்வகணபதி, எம்.பி., வழங்கினார்.

புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, முதியோர், விதவை, மற்றும் ஆதரவற்றோர், பலரும் தங்களுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் சார்பில், வழங்கப்படும் ஓய்வூதியம், உதவித்தொகையை பெற்றுத் தருமாறு ராஜ்ய சபா எம்.பி., செல்வகணபதியிடம் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து அவர்களது மனுக்கள் மகளிர் மற்றும் குழந்தைகள் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஓய்வூதிய ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 32 பேருக்கு செல்வகணபதி, எம்.பி., ஓய்வூதியம், உதவித் தொகைக்கான ஆணையை வழங்கினார். மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் இயக்குநர், துறை அதிகாரிகள், பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us