/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊர்க்காவல் படை வீரர்களுக்கான உடல் தகுதி தேர்வு துவங்கியது
/
ஊர்க்காவல் படை வீரர்களுக்கான உடல் தகுதி தேர்வு துவங்கியது
ஊர்க்காவல் படை வீரர்களுக்கான உடல் தகுதி தேர்வு துவங்கியது
ஊர்க்காவல் படை வீரர்களுக்கான உடல் தகுதி தேர்வு துவங்கியது
ADDED : பிப் 02, 2024 03:40 AM

புதுச்சேரி: கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில், ஊர்க்காவல் படை வீரர்களுக்கான உடல் தகுதி தேர்வு துவங்கியது.
புதுச்சேரி காவல்துறை சார்பில், ஊர்க்காவல் படையில், 420 ஆண்கள், 80 பெண்கள் என மொத்தம், 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப்பணிக்கான உடல் தகுதி தேர்வு, கோரிமேடு, ஆயுதப்படை மைதானத்தில், நேற்று துவங்கியது.
தேர்வு பணிகளை, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடக்கி வைத்து பார்வையிட்டார். அப்போது எவ்வித முறைகேடும் நடைபெறாமல், தேர்வை நடத்தி முடிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
முதல்கட்டமாக, ஆண்களுக்கான உடல் தகுதி தேர்வு முதல் நாளில், 500 பேர் அழைக்கப்பட்டனர். இதில், 292 பேர் மட்டுமே பங்கேற்றனர். பல்வேறு காரணங்களால், 208 பேர் கலந்து கொள்ளவில்லை.
நாளை முதல், தினசரி 1, 200 பேர் இத்தேர்வில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்நாளில், உடல் தகுதி தேர்வில் பங்கேற்க, ஆர்வமுடன் வந்திருந்த ஆண்களின் நுழைவுச்சீட்டு மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. உயரம், மார்பளவு சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட தேர்வுகள் நடந்தன.
வரும், 19ம் தேதியுடன் ஆண்களுக்கு உடல் தகுதி தேர்வு நிறைவு பெறுகிறது. அடுத்ததாக, பெண்களுக்கு வரும், 20ம் தேதி முதல், 23ம் தேதி வரை உடல் தகுதி தேர்வு நடக்கிறது.
உடல் தகுதி தேர்வின்போது, டி.ஜி.பி., ஸ்ரீனிவாஸ், டி.ஐ.ஜி., பிரிஜேந்திரகுமார், எஸ்.பி.கள் ரங்கநாதன், சுவாதி சிங், பாஸ்கரன் உடனிருந்தனர்.

