sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிளஸ் 2 தேர்வு: 14,229 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்

/

பிளஸ் 2 தேர்வு: 14,229 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்

பிளஸ் 2 தேர்வு: 14,229 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்

பிளஸ் 2 தேர்வு: 14,229 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 பொதுத்தேர்வை. 14,229 மாணவர்களும், பத்தாம் வகுப்பு தேர்வை 15,093 மாணவர்களும் எழுதுகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. இதில், புதுச்சேரியில் 5,758 மாணவர்கள், 6,236 மாணவிகள் என மொத்தம் 11,994 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக புதுச்சேரியில் 31 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் ஆண்கள் 945 மாணவர்களும், 1,290 மாணவிகள் என மொத்தம் 2,235 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 9 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாகியில் 397 மாணவர்கள், 337 மாணவிகள் 6 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். ஏனாமில் 393 மாணவ மாணவிகள் 3 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

இதனை தொடர்ந்து, மார்ச் 4ம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கிறது. இதில் புதுச்சேரியில் 31 தேர்வு மையத்தில் 6,988 மாணவ மாணவிகள், காரைக்காலில் 9 தேர்வு மையத்தில் 6,45 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.

மார்ச் 26ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு துவங்குகிறது. இதில், புதுச்சேரியில் 6,452 மாணவர்கள், 6,161 மாணவிகள் உட்பட 12,613 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 37 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் 1,233 மாணவர்கள், 1,247 மாணவிகள் என 2,480 பேர் எதுகின்றனர். 12 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் மாகியில் 7 தேர்வு மையத்தில், 694 மாணவ மாணவிகளும், ஏனாமில் 508 மாணவ மாணவிகள் 3 தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது.




    • Dinamalar Events


    Dinamalar