/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை
/
தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 15, 2025 05:42 AM
பாகூர்: கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி, காமராஜர் நகரை சேர்ந்தவர் விஜயரமணன், 39; கூலி தொழிலாளி. கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனது முதல் மனைவியை பிரிந்து, இரண்டாவதாக சுபலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பாகூரில் வசித்து வந்தார்.
மது பழக்கத்திற்கு அடிமையான விஜயரமணன் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அப்போது, அவரது மனைவி,வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு இருந்தால், எப்படி வீட்டு வாடகை தருவது என கூறி, அவரை கண்டித்து விட்டு, மகனை பள்ளிக்கு அழைத்து சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது, படுகை அறை யில் உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, விஜயரமணன் மின்விசிறி கொக்கியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.