/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூதாட்டியிடம் 4 சவரன் 'அபேஸ்' இருவருக்கு போலீஸ் வலை
/
மூதாட்டியிடம் 4 சவரன் 'அபேஸ்' இருவருக்கு போலீஸ் வலை
மூதாட்டியிடம் 4 சவரன் 'அபேஸ்' இருவருக்கு போலீஸ் வலை
மூதாட்டியிடம் 4 சவரன் 'அபேஸ்' இருவருக்கு போலீஸ் வலை
ADDED : ஜன 21, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் மூதாட்டியை ஏமாற்றி 4 சவரன் நகையை வாங்கிச் சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, அம்பலத்தடையார் மடத்து வீதியைச் சேர்ந்தவர் கஸ்துாரி, 74. இவர் நேற்று காலை 10:30 மணியளவில் பெரிய மார்கெட்டுக்கு சென்றார். அங்கு வந்த வாலிபர்கர் இருவர், மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து, அவரிடம் இருந்த 4 சவரன் நகைகளை ஏமாற்றி வாங்கிக் கொண்டு, போலியான டாலரை கொடுத்து விட்டு தப்பி சென்றனர்.
அந்த டாலர் கவரிங் என்பதை அறிந்த கஸ்துாரி பெரியக்கடை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் தேடி வருகின்றனர்.