ADDED : ஜன 14, 2024 04:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முத்தியால்பேட்டை வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக மாணவர்களுக்கான ரங்கோலி கோலப் போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து, வில்லுப்பாட்டு, நாட்டுப்புற கலைகளான கரகம், காவடி, மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி கள் நடந்தன. மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற உறியடி போட்டி நடந்தது. நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர், துணை முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

