/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெத்தி செமினார் பள்ளியில் பொங்கல் விழா அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு

ADDED : ஜன 14, 2024 04:26 AM

புதுச்சேரி : புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில், அமைச்சர்நமச்சிவாயம் பங்கேற்றார்.
புதுச்சேரி பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் தமிழர் பண்பாட்டு முறையோடு, பொங்கல் பண்டிகை விழா நடந்தது. பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் தலைமை தாங்கினார். விழாவில், சிறப்பு விருந்தினராக, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று உறியடித்து விழாவை துவக்கி வைத்து, பேசியதாவது:
பொங்கல் திருநாள் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் அன்பு செலுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கும் திருநாள்.
உழவரின் உழைப்பிற்கு உயிர் தரும் இந்த விழா, நம் முன்னோர்களின் அற்புதமான அனுபவ படைப்பாகும்.
குப்பையை எரிக்காமல், போகியை கொண்டாடுவது காற்று மாசுபாட்டை தவிர்க்கும்.
பொங்கலை மகிழ்ச்சியாகவும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும் கொண்டாட வேண்டும்' என்றார்.