sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் போராட்டம் சான்று பெறுவதில் சிக்கல்

/

புதுச்சேரியில் போராட்டம் சான்று பெறுவதில் சிக்கல்

புதுச்சேரியில் போராட்டம் சான்று பெறுவதில் சிக்கல்

புதுச்சேரியில் போராட்டம் சான்று பெறுவதில் சிக்கல்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:புதுச்சேரியில், நகராட்சி மற்றும் கொம்யூன் ஊழியர்களின் தொடர் போராட்டத்தால், பிறப்பு, இறப்பு சான்று பெற முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

புதுச்சேரி அரசின் உள்ளாட்சி துறையினர் கீழ் உள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி கடந்த 25ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலாளர் முதல் கடைநிலை ஊழியர்களான துப்புரவு பணியாளர்கள் வரை ஒட்டுமொத்தமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பிறப்பு, இறப்பு, திருமண சான்று பதிவு சான்று பெற முடியாமல், பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர்.

நேற்று முன்தினம் முதல்வர் நடத்திய பேச்சவார்த்தையில், 33 மாத நிலுவைத் தொகை உடன் வழங்குவதாகவும், பிற கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவதாக கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட போராட்டக்குழுவினர், நிலுவை தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியிடும் வரை போராட்டம் தொடரும் என்றனர். அதன்பேரில் நேற்று 9ம் நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது.

தப்பியது துப்புரவு பணி உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்த துப்புரவு பணி தற்போது, தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், மாநிலத்தில் துப்புரவு பணி பாதிக்கப்படவில்லை. அதனால், இந்த போராட்டத்தின் பாதிப்பு தெரியாமல் உள்ளது.






    • Dinamalar Events


    Dinamalar