/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரிகாஸ்ட் முறையில் பெரிய மார்க்கெட் 2 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம்
/
பிரிகாஸ்ட் முறையில் பெரிய மார்க்கெட் 2 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம்
பிரிகாஸ்ட் முறையில் பெரிய மார்க்கெட் 2 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம்
பிரிகாஸ்ட் முறையில் பெரிய மார்க்கெட் 2 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம்
ADDED : ஜன 21, 2024 04:20 AM
புதுச்சேரியில் 300 ஆண்டுகள் முன்பு சிறு வியாபாரிகளுடன் திறந்தவெளி சந்தையாக விளங்கிய இடம் தான் தற்போது நேரு வீதி, காந்தி சந்திப்பில் உள்ள குபேர் மார்க்கெட் (பெரிய மார்க்கெட்). பழைய கட்டடத்தில் நெருக்கடியான இடத்தில் இயங்கி வரும் மார்க்கெட் கட்டடத்தை, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் இடித்து புதிய கட்டடம் கட்ட புதுச்சேரி அரசு முடிவு செய்தது.
மார்க்கெட் கட்டடம் கட்டுவதற்கு, ஓராண்டிற்கு மேல் கட்டுமான பணி நடந்தால், தங்களின் வியாபாரம் பாதிக்கும் என கூறி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் கட்டி முடிக்கப்படும் என உறுதி அளித்தும் வியாபாரிகள் ஏற்கவில்லை. இதனால் ரூ. 54 கோடியில் மார்க்கெட் கட்ட விடப்பட்ட டெண்டர் கைவிடப்பட்டது.
கட்டுமான பணியால் கால தாமதம் ஏற்படும் என்ற காரணத்தை சுட்டி காட்டி புதிய மார்க்கெட் கட்ட எதிர்ப்பு எழுந்ததால், விரைவாக 2 மாதத்தில் மார்க்கெட் கட்டடத்தை கட்டி முடிக்க அரசு திட்டமிட்டது.
தற்போது குமரகுருபள்ளம் பகுதியில் பிரிகாஸ்ட் முறையில் ரூ. 45.5 கோடி மதிப்பில் 12 தளம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இது 2 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதே முறையை பயன்படுத்தி, பெரிய மார்க்கெட் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை திட்டம் தயாரித்துள்ளது.
விரைவில் நிதித்துறை ஒப்புதல் பெற்று, டெண்டர் விடப்பட உள்ளது. இதற்கும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தால், எந்த காலத்திற்கும் பெரிய மார்க்கெட்டை கட்ட முடியாது.

