/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 29, 2025 11:55 PM

காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் ஒ.என்.ஜி.சி., அலுவலகம் முன்பு நேற்று டெல்டா மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், காவிரி டெல்டா பாதுகாப்பு மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதித்துள்ள மத்திய அரசை கண்டித்தும் இதை திரும்பப்பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார்.
மாநில துணை தலைவர் உலகநாதன், சி.பி.ஐ., மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, துணை செயலாளர் இந்திரஜித் முன்னிலை வைகித்தனர்.
மத்திய அரசு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அங்கீகரித்து சட்ட பூர்வான ஆணையை வெளி யிட வலியுறுத்தி சுமார் 200க்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.