Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கல்

 மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கல்

 மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கல்


ADDED : மார் 02, 2026 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 03:54 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மங்கலம் தொகுதி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வழங்கினார்.

புதுச்சேரி அரசின் கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சியை சமீபத்தில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, மங்கலம் தொகுதிக்குட்பட்ட விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கண்ணகி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us