ADDED : ஜன 19, 2024 07:41 AM

புதுச்சேரி: அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
வீராம்பட்டினத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம், அன்னை இந்திரா நகர், சுப்பையா நகர், கோட்டைமேடு, தேங்காய்த்திட்டு உள்ளிட்ட இடங்களில் எம்.ஜி.ஆரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானத்தையும், கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்களுக்கு புத்தாடைகளையும் பொருளாளர் ரவி பாண்டுரங்கன் வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை, தொகுதி செயலாளர் ராஜா செய்திருந்தார்.மாநில துணை செயலாளர் கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாராமன், அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர் பரசுராமன், மாநில இலக்கிய அணி செயலாளர் கலிவரதன், ஜீவா, தொகுதி அவைத் தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

