/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் தொடர் முழக்க போராட்டம்
/
பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் தொடர் முழக்க போராட்டம்
பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் தொடர் முழக்க போராட்டம்
பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் தொடர் முழக்க போராட்டம்
ADDED : ஜன 23, 2024 11:22 PM

புதுச்சேரி : கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர், விடுப்பு எடுத்து தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பொதுப்பணித்துறை பொறியாளர்களின் பணி ஓய்வு குறித்து கடந்த டிச., 1ம் தேதி வெளியிட்ட குறிப்பாணையை திரும்ப பெற வேண்டும்.
காலியாக உள்ள கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
2017ம் முதல் இளநிலை பொறியாளர்களாக பணி செய்யும் ஓவர்சீர் மற்றும் பணி உதவியாளர்களை அப்பதவியிலேயே நிரந்தரம் செய்ய வேண்டும்.
காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பதவியை பணி உதவியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர் கடந்த 12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, அனைத்து பொறியாளர்களும் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து நேற்று பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன், போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பொறியாளர் சங்க பொதுச்செயலாளர் எழில்வண்ணன் தலைமை தாங்கினார்.
அரசு ஊழியர் சம்மேளனம் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், கவுரவ தலைவர் பிரேமதாசன், அன்பழகன், பச்சையப்பன் முன்னிலை வகித்தனர். பொறியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

