/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி வணிக திருவிழா பரிசு கூப்பன் குலுக்கல்
/
புதுச்சேரி வணிக திருவிழா பரிசு கூப்பன் குலுக்கல்
ADDED : மார் 25, 2025 07:41 AM

புதுச்சேரி; புதுச்சேரி வணிக திருவிழாவில், வழங்கப்பட்ட பரிசு கூப்பன் குலுக்கல் நேற்று நடந்தது.
புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை மற்றும் வணிகர் கூட்டமைப்பு சார்பில் ஆண்டு தோறும் 'புதுச்சேரி ஷாப்பிங் பெஸ்ட்டிவல்' என்ற பெயரில் வணிக திருவிழா நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான வணிக திருவிழா கடந்த அக்டோபர் 22ம் தேதி துவங்கி, பிப். 28ல் நிறைவு பெற்றது. இதில், புதுச்சேரியில் 230 வணிக நிறுவனங்கள், காரைக்கால்-159; ஏனாம்-56; மாகி-136 வணிக நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்த வணிக நிறுவனங்களில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டது. பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கி, பரிசு கூப்பன் பெற்றுச் சென்றனர்.
பரிசு கூப்பன் வாங்கியவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, 34 பேருக்கு கார், 68 பேருக்கு ஸ்கூட்டர், 352 பேருக்கு கிரைண்டர், 352 பேருக்கு மிக்சி, 3,518 பேருக்கு சுடு தண்ணீர் கொதிக்க வைக்கும் இயந்திரம், 35 ஆயிரத்து 174 பேருக்கு கிச்சன் செட், 35 ஆயிரத்து 174 பேருக்கு பால் குக்கர் என மொத்தம் 85 ஆயிரம் பரிசுகள் வழங்கப்படுகிறது.
இதற்கான குலுக்கல் நேற்று புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடந்தது. வணிகர் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., பரிசு கூப்பன் குலுக்கலை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், வணிகர் கூட்டமைப்பு பொருளாளர் தங்கமணி, பொதுச் செயலாளர் முருகபாண்டியன், துணை தலைவர் தண்டபாணி, சங்கர், சந்துரு, பாபு, ஹாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.