/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டி வடக்கு, தெற்கு, மாகி அணிகள் வெற்றி
/
புதுச்சேரி மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டி வடக்கு, தெற்கு, மாகி அணிகள் வெற்றி
புதுச்சேரி மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டி வடக்கு, தெற்கு, மாகி அணிகள் வெற்றி
புதுச்சேரி மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டி வடக்கு, தெற்கு, மாகி அணிகள் வெற்றி
ADDED : பிப் 02, 2024 03:43 AM

புதுச்சேரி: மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டியில், புதுச்சேரி வடக்கு, தெற்கு மற்றும் மாகி அணிகள் வெற்றி பெற்றன.
புதுச்சேரி, கேப் சீசெம் மைதானத்தில், 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான, மாஸ்டர்ஸ் பத்து ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று காலை, 9:15 மணிக்கு புதுச்சேரி வடக்கு மற்றும் காரைக்கால் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த வடக்கு அணி, 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 108 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய காரைக்கால் அணி, 10 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து, 61 ரன்கள் மட்டுமே எடுத்தது. புதுச்சேரி வடக்கு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியின் கில்பர்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
காலை 11:45 மணிக்கு நடந்த போட்டியில், மாகி மற்றும் ஏனாம் அணிகள் மோதின. முதலில் ஆடிய மாகி அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 106 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஏனாம், அணி 10 ஓவர் முடிவில், 8 விக்கெட்டுகள் இழந்து 75 ரன்கள் எடுத்தது. மாகி அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த அணியின் சரோஷ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
மதியம் 2:15 மணிக்கு நடந்த போட்டியில் புதுச்சேரி மேற்கு மற்றும் தெற்கு அணிகள் மோதின. முதலில் ஆடிய மேற்கு அணி, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 114 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தெற்கு அணி 9.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 116 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த அணியின் ராகேஷ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

