/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்
/
புதுச்சேரி பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்
புதுச்சேரி பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்
புதுச்சேரி பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்
ADDED : ஜன 21, 2024 04:23 AM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் நாளை நடக்க இருந்த செமஸ்டர் தேர்வு, 25 மற்றும் 30ம் தேதி நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை 22ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, புதுச்சேரி மாநிலத்திற்கு பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
பொது விடுமுறை அறிவிப்பிற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. அதில், 22ம் தேதி விடுமுறையை ஈடு செய்ய பிப்., 17ம் தேதி சனிக்கிழமை அலுவலக பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு நாளை 22ம் தேதி, மதியம் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அன்று நடக்க இருந்த பல்கலைக்கழக இளநிலை பட்ட செமஸ்டர் தேர்வுகள் 25ம் தேதிக்கும், முதுநிலை பட்ட (எம்.பி.ஏ.) செமஸ்டர் தேர்வு 30ம் தேதிக்கும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.