/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வடிகால் வாய்க்கால் வசதி இல்லாமல் குளம் போல் சாலையில் தேங்கும் மழை நீர்
/
வடிகால் வாய்க்கால் வசதி இல்லாமல் குளம் போல் சாலையில் தேங்கும் மழை நீர்
வடிகால் வாய்க்கால் வசதி இல்லாமல் குளம் போல் சாலையில் தேங்கும் மழை நீர்
வடிகால் வாய்க்கால் வசதி இல்லாமல் குளம் போல் சாலையில் தேங்கும் மழை நீர்
ADDED : அக் 20, 2025 10:42 PM

நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் காலனியில் வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால் மழைநீர்சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவுதியடைகின்றனர்.
நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கல்மண்டபம் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சைடுவாய்க்கால் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் பயன்படுத்தும் வீட்டு உபயோக கழிவு நீரை வீட்டின் எதிரில் பள்ளம் தோண்டி தேக்கி வைக்கின்றனர். சிலர் சாலையின் ஓரங்களில் விடுகின்றனர். இதனால் தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசு உற்பத்தி அதிகரித்து அப்பகுதி மக்களுக்கு டெங்கு, சிக்கன்குனியா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய் ஏற்படுகிறது.
மேலும் மழைக்காலங்களில் மழை நீர் வெளியேற வழியில்லாததால் மழைநீர் அணைத்தும் சாலையிலே தேங்கி குளம் போல் காட்சியளிகிறது. இப்பகுதியில் சைடுவாய்க்கால் அமைத்து தர வேணடும் என அப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக தொகுதியில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ., விடம் தெரிவத்து எவ்வித பலனும் இல்லை என புலம்புகின்றனர்.ஆகையால் மக்களின் கோரிக்கையை நிறவேற்றும் வகையில் கல்மண்டபம் காலனியில் சைடு வாய்க்கால் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

