/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் நிலைய வரவேற்பாளர் மயங்கி விழுந்து சாவு
/
போலீஸ் நிலைய வரவேற்பாளர் மயங்கி விழுந்து சாவு
ADDED : ஜன 14, 2024 06:20 AM

புவனகிரி : புவனகிரி போலீஸ் நிலைய பெண் வரவேற்பாளர், மாரடைப்பால் மயங்கி விழுந்து இறந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ராந்தம்கொரட்டூரை சேர்ந்தவர் ஆனந்தன். ஆரணியில் தலைமை காவலராக பணியாற்றி வந்த இவர் பணியின் போது இறந்தார். அதனையொட்டி, அவரது மனைவி தமிழ்ச்செல்விக்கு, 44; கருணை அடிப்படையில் போலீஸ் துறையில் அமைச்சுப் பணி வழங்கப்பட்டது. அதனையொட்டி தமிழ்செல்வி, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், புவனகிரி போலீஸ் ஸ்டேஷனில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். புவனகிரி போலீஸ் குடியிருப்பில் பிளஸ் 2 படிக்கும் தனது மகளுடன் தங்கியிருந்தார்.
நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு கிளம்பியவர், குடியிருப்பிலேயே திடீரென மயங்கி விழுந்தார். அவரது மகள் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, தமிழ்ச்செல்வியை மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், தமிழ்செல்வி ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புவனகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

