/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுவன் இறந்த விவகாரம் வழக்குப் பதிய பரிந்துரை
/
சிறுவன் இறந்த விவகாரம் வழக்குப் பதிய பரிந்துரை
ADDED : பிப் 02, 2024 03:39 AM
புதுச்சேரி: தொழிற்சாலையில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க தொழிலாளர் துறை முத்தியால்பேட்டை போலீசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
பெரிய காலாப்பட்டு தனியார் தொழிற்சாலையில் கடந்த ஆண்டு நவ., 4ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில், 14 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். கம்பெனி தொழிலாளி நெடுஞ்செழியன் மற்றும் சிறுவன் ஒருவனும் பலியாகினர்.
இதையடுத்து, காலாப்பட்டு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்தும் குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்தி இறந்தது குறித்தும் காலாப்பட்டு மக்கள் நல சங்கம் சார்பில், மத்திய தொழில்துறை மற்றும் புதுச்சேரி தொழிலாளர் துறைக்கு புகார் கொடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டது. அதில் இறந்த சிறுவனுக்கு 16 வயது மட்டுமே இருந்தது தெரிய வந்தது. அதனையடுத்து புகாரின் அடிப்படையில் கம்பெனி மீது வழக்குப் பதிவு செய்ய முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு புதுச்சேரி தொழிலாளர் துறை தொழிற்சாலைகளின் ஆய்வாளர் முரளி பரிந்துரை செய்துள்ளார்.
இவ்விவகாரத்தில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விரைவில் விசாரணையை துவங்க உள்ளனர்.

