/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புகழ் பெற்ற கார்ஸ்டன் விக்கின் 'ருத்ர வீணை' இசை நிகழ்ச்சி
/
புகழ் பெற்ற கார்ஸ்டன் விக்கின் 'ருத்ர வீணை' இசை நிகழ்ச்சி
புகழ் பெற்ற கார்ஸ்டன் விக்கின் 'ருத்ர வீணை' இசை நிகழ்ச்சி
புகழ் பெற்ற கார்ஸ்டன் விக்கின் 'ருத்ர வீணை' இசை நிகழ்ச்சி
ADDED : ஜன 21, 2024 04:30 AM

புதுச்சேரி: புதுச்சேரி, வைத்திக்குப்பம், ஆரோதன் கார்டன் கிரட்டிஷேரியாவில் நேற்று இரவு வீணை இசை கலைஞர் 'கார்ஸ்டன் விக்'கின் ருத்ர வீணை இசை நிகழ்ச்சி நடந்தது.
கொல்கத்தாவில் வசிக்கும் ஜெர்மனை சேர்ந்த கார்ஸ்டன் விக், 53, புகழ்பெற்ற சாரோட் இசைக் கலைஞர். பத்மபூஷன் உஸ்தாத் ஆசாத் அலி கானிடம் இசை பயின்றவர். இவர் வீணை இசையில் மேஸ்ட்ரோவாக இருந்து வருகிறார்.
சர்வதேச பார்வையாளர்களை பெற்ற இவரின் ருத்ரவீணை நிகழ்ச்சி இந்தியாவில் பிரபலம். இவர், சாந்திபிரகாஷ் - தியானம் - ருத்ர வீணையில் மாலை ராகங்கள் என்ற தலைப்பில் புதுச்சேரி வைத்திக்குப்பம், ஆரோதன் கார்டன் கிரட்டிஷேரியாவில் நேற்று இரவு ருத்ர வீணை இசை நிகழ்ச்சி நடத்தினார்.
பண்டைய பாரம்பரியத்தை ருத்ர வீணையில் இசைத்து இந்திய மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கினார். நிகழ்ச்சியை ஆரோதன் ஆர்ட் கேலரி இயக்குனர் லலித் வர்மா துவக்கி வைத்து, வரவேற்றார்.
நிகழ்ச்சியை ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர்.

