Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உழந்தை ஏரியை துார்வார கோரிக்கை

 உழந்தை ஏரியை துார்வார கோரிக்கை

 உழந்தை ஏரியை துார்வார கோரிக்கை


ADDED : ஏப் 29, 2026 04:33 AM

Follow on Google

ADDED : ஏப் 29, 2026 04:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உழந்தை ஏரியை கோடை காலத்திலேயே துார்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட அரும்பார்த்தபுரம் பைபாசில் அமைந்துள்ள உழந்தை ஏரி நகரப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. சுமார் 165 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில் தேங்கும் மழைநீர் காரணமாக குடிநீர் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஏரியில் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.

இதனால், ஏரி முழுதும் தண்ணீர் இன்றி வறண்டு வாய்க்கால் போல் காட்சியளிக்கிறது.

இதற்கிடையே, ஏரியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், தண்ணீர் இன்றி வறண்டு வரும் ஏரி பகுதிகளில் கொட்டப்பட்டு வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.

எனவே, உழந்தை ஏரியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், கோடை காலத்தை பயன்படுத்தி பொதுப்பணித் துறை அதிகாரிகள், மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக, ஏரியை முழுமையாக துார்வாரி அதிகப் படியான தண்ணீர் தேங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவர்கரை வட்டார மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap