/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறக்கும் மாஜி போலீசாருக்கு மரியாதை சுற்றறிக்கை அனுப்ப கோரிக்கை
/
இறக்கும் மாஜி போலீசாருக்கு மரியாதை சுற்றறிக்கை அனுப்ப கோரிக்கை
இறக்கும் மாஜி போலீசாருக்கு மரியாதை சுற்றறிக்கை அனுப்ப கோரிக்கை
இறக்கும் மாஜி போலீசாருக்கு மரியாதை சுற்றறிக்கை அனுப்ப கோரிக்கை
ADDED : ஜன 19, 2024 07:42 AM
புதுச்சேரி: மரணமடையும் ஓய்வு பெற்ற போலீசாருக்கு இறுதி மரியாதை செலுத்த அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என, ஓய்வு பெற்ற காவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்க தலைவர் ஞானபிரகாசம் டி.ஜி.பி.,க்கு அனுப்பியுள்ள மனு;
புதுச்சேரி காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற காவலர்கள் இறக்கும்போது அரசு மரியாதை செலுத்துவது தொடர்பாக கடந்த 1989ல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு அதிகாரிகளால் பின்பற்றப்படவில்லை.
வில்லியனுாரை சேர்ந்த ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் குழந்தைவேலு கடந்த 14ம் தேதி இறந்தார். வில்லியனுார் காவல் நிலைய அதிகாரிகள், உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும், அவருக்கு காவல் துறை சார்பில் இறுதி மரியாதை செலுத்தாதது அதிர்ச்சியளிக்கிறது.
எனவே, மரணமடையும் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.