Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரதியார் பல்கலைக்கூடத்தில் மாலை வகுப்பு துவக்க கோரிக்கை

 பாரதியார் பல்கலைக்கூடத்தில் மாலை வகுப்பு துவக்க கோரிக்கை

 பாரதியார் பல்கலைக்கூடத்தில் மாலை வகுப்பு துவக்க கோரிக்கை


ADDED : ஏப் 21, 2026 06:15 PM

Follow on Google

ADDED : ஏப் 21, 2026 06:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: பாரதியார் பல்கலைக்கூடத்தில் மாலை நேர வகுப்புகள் துவக்க வேண்டும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

அரியாங்குப்பத்தில் கலைப்பண்பாட்டு துறை மூலம் பாரதியார் பல்கலைக்கூடம் இயங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள கல்லுாரிகளில் நுண்கலைத்துறை, நடனத்துறை, இசைத்துறை ஆகிய மூன்று கலைத்துறையும் ஒரே கல்லுாரியில் மாணவர்கள் படித்து வருவது சிறப்பு வாய்ந்ததாகும்.

இக்கல்லுாரியில் மூன்று துறைகளில் மொத்தம் 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு போதிய வகுப்பறைகள் பற்றாக்குறை இருப்பதால், புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. மேலும், மூன்று துறைகளில் உள்ள பேராசிரியர்கள் பற்றாக்குறையை, நிரப்ப வேண்டும் என, மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், கடந்த 27ம் ஆண்டுகள் கல்லுாரியில் மாலை நேர வகுப்புகள் நடந்து வந்தது. கடந்த ஆண்டு முதல் மாலை நேர வகுப்புகள் நடக்காமல் இருந்து வருகிறது. புதுச்சேரி, மற்றும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மலை நேர வகுப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாலை நேர வகுப்புகள் துவக்க வேண்டும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர், கலைப்பண்பாட்டுத்துறை இயக்குனரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap