/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 109 கோடி வங்கி கணக்கில் சேர்ப்பு
/
ரூ. 109 கோடி வங்கி கணக்கில் சேர்ப்பு
ADDED : ஜன 21, 2024 04:21 AM
மத்திய அரசு மூலம் ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ அரிசி வீதம், குடும்ப உறுப்பினர்களை கணக்கிட்டு அந்த பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
மாநில அரசு சிவப்பு ரேஷன் கார்டுக்கு ரூ. 600, மஞ்சள் கார்டுக்கு ரூ. 150 வீதம் அரிசி பணம் வழங்குகிறது.
கடந்த நவ., டிச., மாத தொகையாக ரூ. 48.18 கோடி செலுத்தப்பட்டது.
பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ. 750 வீதம், ரூ. 24.40 கோடி, நவ., டிச., மாத காஸ் மானியம் ரூ. 3.48 கோடி செலுத்தப்பட்டது.
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு இலவச வேட்டி திட்டத்தில் 1,27,628 பேருக்கு, ரூ. 12.76 கோடி செலுத்தப்பட்டது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் 1,30,791 பேருக்கு வேட்டி சேலைக்கு பதில் ஒரு நபர் கார்டுக்கு ரூ. 500, இருவருக்கு மேல் உள்ள கார்டுக்கு ரூ. 1,000 வீதம் ரூ. 12.29 கோடி செலுத்தப்பட்டது.
குடும்ப தலைவிக்கு மாத உதவி தொகை திட்டத்தில் அக்., நவ., மாதத்திற்கு 40 ஆயிரம் பேருக்கு ரூ. 8 கோடி செலுத்தப்பட்டது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்தோருக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது.
பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ. 109.11 கோடி வங்கி கணக்குகளில் அரசு செலுத்தி உள்ளது.

