sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான பீர் பாட்டில்கள் பறிமுதல்

/

ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான பீர் பாட்டில்கள் பறிமுதல்

ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான பீர் பாட்டில்கள் பறிமுதல்

ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான பீர் பாட்டில்கள் பறிமுதல்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : கிருமாம்பாக்கத்தில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பீர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்றிரவு பரிக்கல்பட்டு - முள்ளோடை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியார் மதுபானக்கடை அருகே சந்தேகத்திற்கிடமாக அட்டை பெட்டியுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் வருவதை கண்ட அந்த வாலிபர், அட்டை பெட்டியை அங்கேயே போட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டார். பின்னர், போலீசார் அந்த அட்டை பெட்டியை சோதனை செய்தனர்.

அதில் 650 எம்.எல்., அளவுள்ள 72 பீர் பாட்டில்கள் இருந்தன. இதையடுத்து பீர் பாட்டில்களை பறிமுதல் செய்த கிருமாம்பாக்கம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.

மேலும் தப்பியோடிய வாலிபர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் லோக்சபா தேர்தல் முன்னிட்டு, தமிழகப் பகுதிக்கு மதுபாட்டிலை கடந்த முயன்றாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும்.




    • Dinamalar Events


    Dinamalar