/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிேஷக முதலாம் ஆண்டு விழா
/
சாரம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிேஷக முதலாம் ஆண்டு விழா
சாரம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிேஷக முதலாம் ஆண்டு விழா
சாரம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிேஷக முதலாம் ஆண்டு விழா
ADDED : ஜன 23, 2024 04:51 AM

புதுச்சேரி, : சாரம் சுப்ரமணியர் கோவிலின் கும்பாபிேஷக முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடந்தது.
சாரத்தில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணி சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் கும்பாபிேஷக முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று காலை சுவாமிகளுக்கு மகா அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மாலையில், முத்து விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், தையல்நாயகி அம்மன் சமேத வைத்தீஸ்வர சுவாமி, நாகமுத்து மாரியம்மன், அபய ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகள் வீதியுலா நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
முன்னதாக, கும்பாபிேஷக ஆண்டு விழா மற்றும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஜான்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.அயோத்தி கோவில் கும்பாபிேஷகம் பெரிய திரையில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
சாரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பார்த்தனர்.
விழா ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன், ஆலய அர்ச்சகர்கள் சிவராம குருக்கள், கார்த்திகேய குருக்கள், உதவி தம்புரார் முத்துகுமாரசாமி செய்திருந்தனர்.

