/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பயன்படுத்திவிட்டு துாக்கி எறிந்த 'டெட்ரா பேக்'குகளில் இருக்கை
/
பயன்படுத்திவிட்டு துாக்கி எறிந்த 'டெட்ரா பேக்'குகளில் இருக்கை
பயன்படுத்திவிட்டு துாக்கி எறிந்த 'டெட்ரா பேக்'குகளில் இருக்கை
பயன்படுத்திவிட்டு துாக்கி எறிந்த 'டெட்ரா பேக்'குகளில் இருக்கை
ADDED : ஜன 14, 2024 03:58 AM

குடித்துவிட்டு துாக்கி எறியப்படும் 'டெட்ரா பேக்'குகளில் செய்த இருக்கை 5 ஆயிரம் ரூபாய்க்கு ஆரோவில்லில் விற்கப்படுகிறது.
புதுச்சேரி அடுத்த ஆரோவில் சர்வதேச நகரில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3,500 பேருக்கு மேல் வசித்து வருகின்ற இந்த நகரில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் இங்கு ஏராளமான குப்பைகள் சேகரமாகிறது.
இந்த குப்பைகளை மாசு ஏற்படுத்தாத வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, மக்காத குப்பைகளில் இருந்து புதிய பொருட்களை ஆரோவில்வாசிகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதற்காகவே ஆரோவில் விசிட்டர் சென்டர் வளாகத்தில் 'அப் சைக்கிளிங்' எனும் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களுமே மறுசுழற்சி முறையில் தயாரானவை. இங்கு உடைந்த 'சிடி' யில் தயாரான கீ செயின்கள், கிழிந்து போன ஜீன்ஸ் பேண்ட்களில் அழகு பைகள், உடைந்து போன கண்ணாடி பாட்டில்களில் ரசனையான படைப்புகள் என பல்வேறு வகையான பொருட்கள் விற்கப்படுகிறது.
இதில், குடித்துவிட்டு துாக்கி எறிந்த ஜூஸ், பால், ஊட்டச்சத்து பானங்களின் 'டெட்ரா பேக்'கை கொண்டு வரவேற்பறையை அலங்கரிக்கும் விதத்தில் தனி நபர் அமரும் இருக்கைகள், பெட்டிகள் செய்து விற்கப்படுகிறது. ஒரு இருக்கையின் விலை 5 ஆயிரம் ரூபாய்.
பழைய டெட்ரா பேக், பேப்பர், சாதப்பசை, பெவிக்கால் கொண்டு இந்த இருக்கையை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மார்க் என்பவர் தயார் செய்து விற்கிறார். ஆரோவில்லிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த இருக்கை உள்பட பல்வேறு பொருட்களை ஆரோவில்லில் உள்ள 'அப் சைக்கிளிங்' கடையில் இருந்து ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

