/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடுகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி சோலாருக்கு மாறுங்க... பணத்தை சேமியுங்க...
/
வீடுகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி சோலாருக்கு மாறுங்க... பணத்தை சேமியுங்க...
வீடுகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி சோலாருக்கு மாறுங்க... பணத்தை சேமியுங்க...
வீடுகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி சோலாருக்கு மாறுங்க... பணத்தை சேமியுங்க...
ADDED : ஜன 14, 2024 03:58 AM
வீடுகளை சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்களாக மாற்றினால், மின்சார செலவினை பெருமளவு சேமிக்கலாம் என, தெரிவித்துள்ள மின் துறை, சூரிய பேனல்கள் வைக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சூரிய ஒளி மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுத்து வருகிறது.
வரும் 2026ம் ஆண்டிற்குள் வீடுகளில் சூரிய ஒளி மின் உற்பத்தியை 5 மெகாவாட்டாக உயர்த்த புதுச்சேரி மின் துறை திட்டமிட்டுள்ளது.
எனவே, புதுச்சேரி மாநிலத்தில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டு மேற்கூரைகளில் சிறிய அளவிலான சூரிய தகடுகள் மூலம் மின் உற்பத்தி நிலையம் அமைத்து 3 கிலோவாட் வரை மானியம் பெறலாம். 1 கிலோ வாட்டிற்கு 18,000 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம்.
சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம், அவர்களது சொந்த உபயோகத்திற்கு பிறகு உபரியாக உள்ள மின்சாரத்தை, புதுச்சேரி மின் துறைக்கு விற்கலாம்.
வீட்டில் மேற்கூரை சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க முதலில் http://solarrooftop.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி நிலைய விற்பனையாளர்கள், நிறுவனங்கள் மூலம் வீடுகளில் சோலார் பேனல்கள் குறைந்த செலவில் அமைக்க முடியும்.
இதற்கான மானியம் அதனை நிறுவி இயக்கிய பிறகு நுகர்வோர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
ஒரு கிலோ வாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க தோராயமாக 100 சதுர அடி நிழலில்லா மேல்தளம் தேவைப்படும். இதன் மூலம் மாதம் 15 யூனிட்கள் உற்பத்தியாகும்.
நுகர்வோர் பயன்பாட்டிற்கு பிறகு உபரியாக உள்ள மின்சாரம் அவர்களின் மாதாந்திர மின் கட்டண பில்லில் வரவு வைக்கப்படும். முறையாக பராமரிக்கப்படும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் ஆயுட்காலம் 25 ஆண்டுகள். இதற்கான செலவு 5 ஆண்டுகளில் திரும்ப கிடைத்துவிடும்.
கூடுதல் விபரங்களுக்கு ee7ped.pon@nic.in என்ற இமெயில் அல்லது 9489080370 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

