/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில்களில் திருடும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு
/
கோவில்களில் திருடும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு
கோவில்களில் திருடும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு
கோவில்களில் திருடும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு
ADDED : ஜன 14, 2024 06:08 AM
அரியாங்குப்பம், : புதுச்சேரி - கடலுார் கிராம பகுதியில் உள்ள கோவில்களில் திருடும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையம் புட்லாய் அம்மன் கோவில், நல்லவாடு அம்மன் கோவில்களில் கடந்த அக்டோபர் 22ம் தேதி உண்டியல் உடைத்து பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த தாலிகள் திருடப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் சம்பவ பகுதிகளில் இருந்த சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், மர்ம நபர்கள் மூவர், சுவர் ஏறி குதித்து, கடப்பாறையால் உண்டியலை உடைத்து, பணத்தை திருடினர். பின், அந்த நபர்கள் கோவில் உள்ளே சென்று அம்மன் கழுத்தில் இருந்த தாலியை திருடிச் சென்றது தெரிய வந்தது.
அதேபோல், பாகூர், கிருமாம்பாக்கம் அருகே உள்ள தமிழக பகுதி கோவில்களில் 3 மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து, பணம் மற்றும் அம்மன் தாலியை திருடிச் சென்றுள்ளனர்.
கோவில்களை குறிவைத்து திருடும் இந்த கும்பலை பிடிக்க புதுச்சேரி மற்றும் கடலுார் மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவருகின்றனர்.

