/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
/
குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
ADDED : மே 10, 2025 12:10 AM
புதுச்சேரி: கருவடிக்குப்பம், குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை நடக்கிறது.
நவக் கிரகங்களில் ஒன்றான குரு பகவான் நாளை 11ம் தேதி பகல் 1:19 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்கிறார். அதனையொட்டி, கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது.
நாளை காலை 8:00 மணிக்கு கலச பிரதிஷ்டை, 10:00 மணிக்கு கணபதி ேஹாமம், குரு பகவான் காயத்ரி மந்திர ேஹாமம் மற்றும் நவக்கிரக ேஹாமம், 11:30 மணிக்கு குரு பகவானுக்கு மகா அபிேஷகத்தை தொடர்ந்து, பகல் 1:19 மணிக்கு, குரு பகவானுக்கு மகா தீபாராதனை நடக்கிறது. பூஜைகளை தேவஸ்தான குருக்கள் தேவசேனாதிபதி செய்கிறார்.
குரு பெயர்ச்சி சிறப்பு பூஜையில் பங்கேற்று கலசம் பெற விரும்புவோர் கோவில் அலுவலகத்தில் ரூ.300 செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். மேலும், அபிேஷகத்திற்கு தேவையான பால், தயிர், நெய், பழவகைகள், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களை நாளை காலை 11:00 மணிக்கு முன்பாக அளிக்கலாம்.
குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், துணைத் தலைவர் சசிக்குமார், செயலாளர் மதிவாணன், பொருளாளர் கதிரேசன், உறுப்பினர் அருள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.