Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விதை சிகிச்சை முறைகள் குறித்து மாணவிகள் விளக்கம்

விதை சிகிச்சை முறைகள் குறித்து மாணவிகள் விளக்கம்

விதை சிகிச்சை முறைகள் குறித்து மாணவிகள் விளக்கம்


ADDED : அக் 01, 2024 06:30 AM

Follow on Google

ADDED : அக் 01, 2024 06:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: கூனிச்சம்பட்டு விவசாயிகளுக்கு விதை சிகிச்சை முறைகள் குறித்து வேளாண் மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

கோயம்புத்துார் காருண்யா பல்கலைக்கழக மாணவிகள் சோபியா, அமிர்தவர்ஷினி, பிரியதர்ஷினி, செல்சியா மேரி, ரேணு ஸ்ரீ, லதா, தீபிகாஸ்ரீ ஆகிய மாணவிகள் திருக்கனுார் பகுதியில் கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக கூனிச்சம்பட்டு கிராம விவசாயிகளுக்கான வேளாண் செயல் விளக்கம் முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு திருக்கனுார் வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன், உதவி வேளாளர் அலுவலர் திருமுருகன், கிராம விரிவாக்க பணியாளர் தங்கதுரை முன்னிலை வகித்தனர்.

இதில், மாணவிகள் மண் மாதிரி சேகரிப்பு தொழில் நுட்பங்கள், விதை சிகிச்சை முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், விவசாயிகளுக்கான நவீன வேளாண் தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்து விளக்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap