/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
4 ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பொறுப்புகள் திடீர் மாற்றம் டி.ஐ.ஜி.,யாக பிரிஜேந்திரகுமார் நியமனம்

ADDED : ஜன 19, 2024 07:47 AM
புதுச்சேரி: சீனியர் எஸ்.பி., பிரிஜேந்திரகுமார் புதுச்சேரி டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி குற்ற புலனாய்வு சீனியர் எஸ்.பி., பிரிஜேந்திரகுமார்; போக்குவரத்து, சைபர் செல், சி.சி.டி.என்.எஸ்., பிரிவுகளின் சீனியர் எஸ்.பி., பொறுப்புகளை கவனித்து வந்தார். டி.ஐ.ஜி., பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்நிலையில் சீனியர் எஸ்.பி., பிரிஜேந்திரகுமாரின் பொறுப்புகள் விடுவிக்கப்பட்டு, அவர் புதுச்சேரி டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்த பொறுப்புகள் 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பகிர்ந்தளித்து, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., நார சைதன்யாவுக்கு அப்பொறுப்புடன், போக்குவரத்து சீனியர் எஸ்.பி., கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு சீனியர் எஸ்.பி., சுவாதி சிங், பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஐ.ஆர்.பி., கமாண்டண்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குற்ற புலனாய்வு கூடுதல் பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் ஐ.பி.எஸ்., அதிகாரியான லட்சுமி சவுஜன்யா கிழக்கு எஸ்.பி., யாக நியமிக்கப்பட்டுள்ளார்.