/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'நாராயணன் திருவடிகளில் சரணாகதி பண்ணுவதே நாம் அடையும் உபாயம்' ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

ADDED : ஜன 14, 2024 04:10 AM
புதுச்சேரி : முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் திருப்பாவையின் 28ம் பாசுரம் குறித்து நேற்று உபன்யாசம் செய்ததாவது:
இந்த பாசுரம் சரணாகதித் தத்துவத்தின் பெருமையை அழகாக விளக்குகிறது. ஸ்ரீமந் நாராயணன் திருவடிகளில் சரணாகதி பண்ணுவதே அவனை அடையும் உபாயம்.
த்வய மந்திரத்தின் பெருமையை நம்மாழ்வார் மூலம் தெளிவு படுத்த பகவான் ஆழ்வாரை அலைக்கழித்ததால் பல பாசுரங்கள் என்ற ரத்தினங்கள் நமக்குக் கிடைத்தன. நம்மாழ்வார் வானமாமலை, திருக்குடந்தை, திருவல்லவாழ் ஆகிய திவ்ய தேச எம்பெருமான்களையும், கிருஷ்ணாவதார மேன்மையும் போற்றி, எம்பெருமானை மட்டும் சரணாகதி அடைந்தார்.
அதனை எம்பெருமான் ஏற்கவில்லை. இறுதியில், திருமலையில் ஸ்ரீநிவாசனை பிராட்டியுடன் சேர்த்து சரணாகதி அடைந்தார். எம்பெருமான் ஆழ்வாருக்கு அருள் புரிந்தான்.
தொண்டரடிப் பொடி ஆழ்வார் 45 பாசுரம் செய்து த்வய மந்திரத்தின் மேன்மையையும், சரணாகதி தத்துவத்தின் பொருளையும் விளக்கினார். நம்மாழ்வார் பல பாசுரங்கள் சரணாகதி பற்றி சொல்லியும், தாயாரைச் சேர்த்துப் பணிந்த பாசுரங்களில் தான் சரணாகதி ஏற்கப்பட்டது.
ஆனால், ஆண்டாள் 28, 29 என இரண்டு பாசுரங்களில் த்வய மந்திரத்தின் மேன்மையைச் சொல்லி, சரணாகதித் தத்துவத்தை நிலைநாட்டி விட்டாள். இந்த ஒரு பாசுரத்தில் மட்டும் தான் ஆண்டாள் நாச்சியார் எம்பெருமானை இறைவா என்ற சொல்லால் விளித்துள்ளாள் என்பதும் இந்தப் பாசுரத்தின் சிறப்பாகும்.
ஆண்டாள் காட்டிய வழியில் நாமும் துாயோமாய் வந்து, துாமலர் துாவி, வாயினால் படி மனத்தினால் சிந்தித்து பகவானை உள்ளத்தில் கொண்டு, எம்பெருமானை ஆசார்ய முகமாய் சரணாகதி செய்து அவனிடம் ஒன்றுவோம். இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.
திருப்பாவை உபன்யாசம் இன்று ஆண்டாள் திருக்கல்யாணத்துடன் நிறைவு பெறுகிறது.