/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டி - 20 கிரிக்கெட் இறுதி போட்டி புதுச்சேரி மேற்கு அணி கோப்பை வென்றது
/
டி - 20 கிரிக்கெட் இறுதி போட்டி புதுச்சேரி மேற்கு அணி கோப்பை வென்றது
டி - 20 கிரிக்கெட் இறுதி போட்டி புதுச்சேரி மேற்கு அணி கோப்பை வென்றது
டி - 20 கிரிக்கெட் இறுதி போட்டி புதுச்சேரி மேற்கு அணி கோப்பை வென்றது
ADDED : ஜன 19, 2024 07:55 AM

புதுச்சேரி: மாவட்டங்களுக்கு இடையிலான டி - 20 கிரிக்கெட்இறுதி போட்டியில், புதுச்சேரி மேற்குஅணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம். நிறுவனம் இணைந்து, புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டியை நடத்தியது.
கடந்த 2ம் தேதி முதல் போட்டிகள் நடந்து வந்தது. நேற்று முன்தினம் அரை இறுதிப்போட்டி நடந்தது.
நேற்று மாலை 5:30 மணிக்கு நடந்த இறுதிப்போட்டியில், காரைக்கால் அணியும், புதுச்சேரி மேற்கு அணியும் மோதின. முதலில் ஆடிய காரைக்கால் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 163 ரன்கள் எடுத்தது. காரைக்கால் அணியின் கதிரேசன் 42 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். புதுச்சேரி மேற்கு அணியின் ஹர்ஷித் 3 விக்கெட்,முகேஷ், அமீர் ஜீஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
பின்னர் ஆடிய புதுச்சேரி மேற்கு அணி 19 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு, 167 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது. புதுச்சேரி மேற்குஅணியின் ராகவன் 32 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.அமீர் ஜீஷான் 2 விக்கெட் எடுத்ததுடன் 47 பந்துகளில் 76 ரன்கள் அடித்து வெற்றியை தேடி தந்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரியின் முன்னாள் செயலாளர் சந்திரன், கவுரவ செயலாளர் ராமதாஸ், கிரிக்கெட் அட்வைசர் கமிட்டி தலைவர்மயங் மேத்தா, தேர்வாளர் சைஜு மற்றும் மேட்ச் ரெப்ரீ ராம் மோகன் சிங்ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் விருதை 316 ரன்கள் எடுத்த புதுச்சேரி மேற்கு அணியின் லோகேஷ்கிற்கு மயங்மேத்தா வழங்கினார்.சிறந்த பவுலர் விருதை 18 விக்கெட்டுகள் எடுத்த ராஜகவிக்கு சந்திரன் வழங்கினார்.
தொடர் நாயகன் விருதை 248 ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுத்த காரைக்கால் வீரர் தமிழழகனுக்கு சைஜு வழங்கினார்.ராமதாஸ், வெற்றி பெற்ற புதுச்சேரி மேற்கு அணிக்கும், சந்திரன்இரண்டாவது இடம் பிடித்த காரைக்கால் அணிக்கும் கோப்பையை வழங்கினர்.

