/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டி 20 கிரிக்கெட் போட்டி: போலீஸ், கோர்க்காடு அணிகள் அரையிறுதிக்கு தகுதி
/
டி 20 கிரிக்கெட் போட்டி: போலீஸ், கோர்க்காடு அணிகள் அரையிறுதிக்கு தகுதி
டி 20 கிரிக்கெட் போட்டி: போலீஸ், கோர்க்காடு அணிகள் அரையிறுதிக்கு தகுதி
டி 20 கிரிக்கெட் போட்டி: போலீஸ், கோர்க்காடு அணிகள் அரையிறுதிக்கு தகுதி
ADDED : ஜன 23, 2024 04:46 AM

புதுச்சேரி : புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அகாடமி அண்ட் அசோசியேசன் சார்பில், 15வது ஆண்டு டி 20 கிரிக்கெட் லீக் கம் நாக் அவுட் கிரிக்கெட் போட்டிகள் லாஸ்பேட்டை மைதானத்தில் கடந்த அக்., மாதம் துவங்கியது. புதுச்சேரியில் உள்ள 32 கிரிக்கெட் கிளப் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
25வது போட்டியில் புதுச்சேரி போலீஸ் கிரிக்கெட் அணியும், புல்ஸ் லெவன் கிரிக்கெட் அணியும் மோதியது. முதலில் களம் இறங்கிய போலீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் எடுத்தது.
இதில் பிரபு 30 பந்துகளில், 8 பவுண்டரி, 3 சிக்ஸர் உடன் 63 ரன் எடுத்தார். சபரி 17 பந்துகளில் 32 ரன்களும், செல்வம் 13 பந்துகளில் 3 சிக்ஸர் உடன் 21 ரன் எடுத்தார். புல்ஸ் அணியின் லோகு, செல்வா, தினேஷ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
பின்பு களம் இறங்கிய புல்ஸ் லெவன் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழபற்பிற்கு 182 ரன் எடுத்தது. அனீஷ் 38 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 72 ரன் எடுத்தார். சாரதி 31 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 60 ரன் எடுத்தார்.
போலீஸ் அணி மதி 4 விக்கெட்களும், செல்வம் 2 விக்கெட்களை வீழ்த்தினார். 10 ரன் வித்தியாசத்தில் புதுச்சேரி போலீஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதி லீக் போட்டிக்கு தகுதி பெற்றது.
26வது போட்டியில் கோர்க்காடு அணியும், லாஸ்பேட்டை அணியும் மோதி யது. முதலில் களம் இறங்கிய கோர்க்காடு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் எடுத்தது. அந்த அணியின் சொக்கநாதன் 38 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 61 ரன் எடுத்தார்.
விஜயராஜ் 22 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 35 ரன் எடுத்தார். லாஸ்பேட்டை அணியின் அங்கப்பன் 4, முருகன் 2 விக்கெட் எடுத்தனர்.
பின்பு களம் இறங்கிய லாஸ்பேட்டை அணி 20 ஓவரில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 127 ரன் எடுத்தது. அங்கப்பன் 26, தேவா 20 ரன் எடுத்தனர்.
பிரவீன் 3, வினோத் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். கோர்க்காடு அணி 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி லீக் போட்டிக்கு தகுதி பெற்றது.
போட்டிக்கான ஏற்பாடுகளை, டோர்னமெண்ட் கமிட்டி சேர்மன் சந்திரசேகரன், நிர்வாகிகள் ஜில்பர்ட், பார்த்திபன், கணேஷ், அரவிந்த் செய்திருந்தனர்.

