Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டசபை தேர்தலை முன்னிட்டு தாசில்தார்கள் அதிரடி மாற்றம்

 சட்டசபை தேர்தலை முன்னிட்டு தாசில்தார்கள் அதிரடி மாற்றம்

 சட்டசபை தேர்தலை முன்னிட்டு தாசில்தார்கள் அதிரடி மாற்றம்


ADDED : பிப் 19, 2026 05:10 AM

Follow on Google

ADDED : பிப் 19, 2026 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் தாசில்தார் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்கால் தாலுகா அலுவலக தாசில்தார் செல்லமுத்து, புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் அலுவலகத்திற்கும், காரைக்கால் மாவட்ட ஆணைய அலுவலக தாசில்தார் பொய்யாமூர்த்தி, காரைக்கால் தாலுகா அலுவலக தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் அலுவலக தாசில்தார் குமரவேல், வருவாய்த்துறை சிறப்பு செயலாளர் அலுவலகத்திற்கும், புதுச்சேரி தாலுகா அலுவலக தாசில்தார் பிரித்தீவி, வில்லியனுார் துணை கலெக்டர் அலுவலகத்திற்கும், அங்கு பணியாற்றிய புவனேஸ்வரி, புதுச்சேரி வருவாய்த்துறை சிறப்பு செயலாளர் அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வருவாய்துறை சிறப்பு செயலாளர் அலுவலக தாசில்தார் சிலம்பரசன், புதுச்சேரி தாலுகா அலுவலகத்திற்கும், வருவாய்துறை சிறப்பு செயலாளர் அலுவலக தாசில்தார் பாலமுருகன், கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். கூடுதலாக வருவாய்துறை சிறப்பு செயலாளர் அலுவலக புள்ளிவிவர பணிகளை கவனிப்பார்.

புதுச்சேரி வருவாய்துறை வடக்கு துணை கலெக்டர் அலுவலக தாசில்தார் சாந்தி, கலால்துறை துணை ஆணையர் அலுவலகத்திற்கும், அங்கு பணியாற்றிய சைஜூ வருவாய்துறை வடக்கு துணை கலெக்டர் அலுவலகத்திற்கும், வருவாய்த்துறை சிறப்பு செயலாளர் அலுவலக தாசில்தார் ராஜலட்சுமி, பாகூர் தாலுகா அலுவலக தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வந்த கோபால கிருஷ்ணன், வருவாய்த்துறை சிறப்பு செயலாளர் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலக தாசில்தார் மதன்குமார், கலால்துறை துணை ஆணையர் அலுவலகத்திற்கும், அங்கு பணியாற்றி வந்த விபிஷ் பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் குலோத்துங்கன் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap