ADDED : ஜன 21, 2024 04:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, ரயில் நிலையம் எதிரே உள்ள, கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில், தை மாத கிருத்திகையையொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது.
காலையில் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. அதேபோல் உற்வச மூர்த்திகளுக்கும் அபிேஷகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

