/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஐ.டி.,யில் தொழில்நுட்ப மையம்: கவர்னர் திறந்து வைப்பு
/
என்.ஐ.டி.,யில் தொழில்நுட்ப மையம்: கவர்னர் திறந்து வைப்பு
என்.ஐ.டி.,யில் தொழில்நுட்ப மையம்: கவர்னர் திறந்து வைப்பு
என்.ஐ.டி.,யில் தொழில்நுட்ப மையம்: கவர்னர் திறந்து வைப்பு
ADDED : பிப் 06, 2024 04:25 AM

காரைக்கால் : காரைக்கால் என்.ஜ.டி.,யில் புதிதாக அறிவியல் தொழில்நுட்ப மையங்களை நேற்று கவர்னர் தமிழிசை திறந்து வைத்தார்.
காரைக்காலில் மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம்,இயந்திர பொறியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட சிக்மா கலந்தாய்வு அரங்கம் ஆகிய மூன்றையும் நேற்று கவர்னர் தமிழிசை குத்துவிளக்கு ஏற்றிவைத்து திறந்து வைத்தார்.
என்.ஐ.டி., இயக்குனர் (பொறுப்பு) உஷா நடேசன்,கலெக்டர் குலோத்துங்கன் முன்னிலை வகித்தனர். விழாவில் அரசு மூலம் விழிப்புணர்வு செய்த விக்சித் பாரத் என்பன அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சீனியர் எஸ்.பி., மனீஷ், பதிவாளர் சுந்தரவரதன் உள்ளிட்ட அதிகாரிகள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.