ADDED : ஜன 23, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனூார் : செல்லிப்பட்டு செல்வ முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தீமிதி உற்சவம் நாளை நடக்கிறது.
திருக்கனூார் அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத சீர்செல்வ முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 57ம் ஆண்டு தைப்பூச தீமிதி உற்சவம் நாளை (25ம் தேதி) நடக்கிறது.
இதையொட்டி, அன்று காலை 5:00 மணிக்கு செல்வ முருகன் சுவாமி மற்றும் காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, காலை 7:00 மணி அளவில், தைப்பூச தீமிதி காவடி உற்சவம் நடக்கிறது.
மாலை 5:00 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத செல்வ முருகன் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.

