/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீ விபத்தில் வீடு எரிந்து ரூ.1.5 லட்சம் பொருட்கள் சேதம்
/
தீ விபத்தில் வீடு எரிந்து ரூ.1.5 லட்சம் பொருட்கள் சேதம்
தீ விபத்தில் வீடு எரிந்து ரூ.1.5 லட்சம் பொருட்கள் சேதம்
தீ விபத்தில் வீடு எரிந்து ரூ.1.5 லட்சம் பொருட்கள் சேதம்
ADDED : ஜன 21, 2024 04:16 AM
புதுச்சேரி: திப்புராயபேட்டையில் வீடு தீப்பற்றி எரிந்து ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சாம்பலாயின.
புதுச்சேரி, திப்புராயபேட்டை அந்தோணியார் கோவில் வீதியை சேர்ந்தவர் தங்கராஜ், 38; ஆட்டோ ஓட்டுனர். இவர் அந்த பகுதியில் மாடி வீட்டின் மேல் அட்டை போட்ட வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றனர்.
அப்போது, வீட்டில் திடீரென புகை வந்தது. அருகில் இருந்தவர்கள் மாடிக்கு சென்று பார்த்த போது, வீட்டில் உள்ளே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதுபற்றி, கடற்கரை சாலையில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இதில், வீட்டில் இருந்த டி.வி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட 1.50 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சாம்பலாயின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, தீயணைப்பு வீரர்கள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

