நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி,: பூமியான்பேட்டை, நடேசன் நகரில் ஒருவர் பொதுமக்களை மிரட்டும் வகையில் கத்தியுடன் ரகளை செய்வதாக நேற்று போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், டி.நகர் சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு கத்தியுடன் நின்ற பூமியான்பேட்டை தாஸ், 36; என்பவரை கைது செய் தனர். அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

