நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் பொதுமக்களை ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பு அருகே வாலிபர் ஒருவர் நின்று கொண்டு பொதுமக்களை ஆபாசமாக பேசி வருவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில், சப் இன்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், விழுப்பரம் மாவட்டம், கோட்டக்குப்பம், அய்யனார் கோவில் வீதியை சேர்ந்த சுரேந்திரன், 25; என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

