/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்டாண்டிங் ஆர்டர் இல்லாத புதுச்சேரி போலீஸ் 60 ஆண்டுகள் கடந்தும் தொடரும் அவலம்
/
ஸ்டாண்டிங் ஆர்டர் இல்லாத புதுச்சேரி போலீஸ் 60 ஆண்டுகள் கடந்தும் தொடரும் அவலம்
ஸ்டாண்டிங் ஆர்டர் இல்லாத புதுச்சேரி போலீஸ் 60 ஆண்டுகள் கடந்தும் தொடரும் அவலம்
ஸ்டாண்டிங் ஆர்டர் இல்லாத புதுச்சேரி போலீஸ் 60 ஆண்டுகள் கடந்தும் தொடரும் அவலம்
ADDED : ஜன 21, 2024 04:21 AM
பிரெஞ்சு ஆட்சி காலத்தில் சிப்பாய் கம்பெனியாக புதுச்சேரி போலீஸ் நிர்வாகம், கடந்த 1963 செப்., 30ம் தேதி வரை பிரெஞ்சு சட்டப்படி இயங்கியது. கடந்த 1963 அக். 1ம் தேதி முதல் இந்திய சட்டம் அமலுக்கு வந்தது.
நிர்வாக மாற்றத்திற்கு பிறகு டி.ஜி.பி., ஏ.டி.ஜி.பி., ஐ.ஜி, டி.ஐ.ஜி., சீனியர் எஸ்.பி., எஸ்.பி., என, பதவிகள் உருவாக்கப்பட்டது.
ஆனால், போலீஸ் துறையின் இதயமாக கருதப்படும் போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டர், புதுச்சேரி போலீசுக்கு என தனியாக உருவாக்கவில்லை.
ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டர் உள்ளது. இதில், கான்ஸ்டபிள் முதல் டி.ஜி.பி., வரை உள்ள போலீஸ் பணி, கடமை, நிர்வாகம், சீருடை, சம்பளம், ஓய்வூதியம் என அனைத்தும் இடம் பெறும்.
தமிழக போலீசுக்கு 4 தொகுப்பு (வால்யூம்) போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டர் புத்தகம் உள்ளது. கேரளா, ஆந்திரா என அனைத்து மாநிலத்திற்கும் ஸ்டாண்டிங் ஆர்டர் உள்ளது.
பிரெஞ்சு நிர்வாகத்திடம் இருந்து முழுமையாக வெளியேறி, 60 ஆண்டுகள் கடந்தும், புதுச்சேரி போலீசுக்கு என தனி ஸ்டாண்டிங் ஆர்டர் இல்லை.டி.ஜி.பி.,யாக பதவி வகிக்கும் அதிகாரி உத்தரவு ஸ்டாண்டிங் ஆர்டர் ஆக பின்பற்றப்படுகிறது.
இதனால் சட்டம் ஒழுங்கு சீராக பராமரிப்பதில் தொய்வு ஏற்படுகிறது.கடந்த சில ஆண்டிற்கு முன் புதுச்சேரி போலீசுக்கு என, தனி ஸ்டாண்டிங் ஆர்டர் தயாரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அது பாதியிலே நிறுத்தப்பட்டது.
ஒட்டுமொத்த புதுச்சேரி போலீஸ் நிர்வாகத்தை சீர்படுத்த புதுச்சேரி போலீசுக்கு என, தனி ஸ்டாண்டிங் ஆர்டர் தயாரிக்க அரசு முயற்சிக்க வேண்டும்.

