/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுாறு நாள் வேலை திட்டம் சபாநாயகர் துவக்கி வைப்பு
/
நுாறு நாள் வேலை திட்டம் சபாநாயகர் துவக்கி வைப்பு
ADDED : பிப் 01, 2024 11:30 PM

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில் ரூ. 36.09 லட்சம் மதிப்பில் நுாறு நாள் வேலைத் திட்டத்தை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் மதகு சாலை வாய்க்கால் மற்றும் துாக்குபாளையம் ஏரி வாய்க்காலை ரூ.10.11 லட்சம் மதிப்பில் துார் வாரி மேம்படுத்துவது. பூரணாங்குப்பம் உப்பனாற்றின் கரையை பலப்படுத்துவது. வீரப்பன் குளம் முதல் உப்பனாறு வரை உள்ள வாய்க்காலை ரூ. 23.46 லட்சம் மதிப்பில் துார்வாரி ஆழப்படுத்துதல், அரியாங்குப்பம் டோல்கேட் பகுதியில் உள்ள குள்ள கவுண்டர் தோப்பு முதல் மெயின் ரோடு வரை உள்ள வாய்க்காலை ரூ.2.52 லட்சத்தில் துார்வாரி ஆழப்படுத்துவது என, ரூ. 36.09 லட்சம் மதிப்பிலான பணிகளை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், உதவிப் பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவஞானம், பணி ஆய்வாளர் நற்குணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

